Thursday, April 21, 2016

Episode-19-உயிர்களைக் காக்கும் வருங்கால அவசர சிகிச்சைகள்

தலைப்பு: உயிர்களைக் காக்கும் வருங்கால அவசர சிகிச்சைகள்
                இன்றைய உலகில் அதிகமாக மக்களைக் கொல்லும் வியாதி எது? ஹார்ட் அட்டாக், கேன்சர் என பல லைஃப் ஸ்டைல் வியாதிகள் முன்னணியில் இருந்தாலும், ரோடுகளில் விபத்தினால் இறப்பது மிக அதிக அளவாகும். ஒருவருக்கு காயம் எந்த அளவு என்பதை விட எங்கே, எப்போது விபத்தில் சிக்குகிறார் என்பதே அவரின் வாழ்வையோ சாவையா தீர்மானிக்கிறது. அண்ணா சாலையில் ஒருவருக்கு பெரிய விபத்தாகி இதயத்துள் பெரிய கம்பி புகுந்திருக்கிறது. அதே வேளையில் ஊட்டி அருகே மஞ்சூரில் ஒருவர் விபத்தில் சிக்கி கை துண்டாகிறது. இந்த இருவரில் யாருக்கு பிழைக்கும் வாய்ப்பு அதிகம்? சென்னை வாசிக்கு தான். உலகத்தர சிகிச்சைகள் அருகில் கிடைத்தாலன்றி விபத்தில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவே.
                விபத்து நடந்த பின் இருக்கும் முதல் சிறு மணித்துளிகளை 'கோல்டன் ஹவர்' என்கிறோம். மருத்துவமனைக்கு செல்லும் முன், இந்த டயத்தில் என்ன நடக்கிறது என்பதே முக்கியம். பலர் சாவதற்கு, விபத்து நடந்த பின் மருத்துவமணைக்கு செல்ல தாமதம் ஆவதும், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் தகுந்த சிகிச்சையும் கிடைக்காததும் முக்கிய காரணிகள்.
                உலகிலேயே மிகவும் சிறந்த போர்ப்படை, அமெரிக்காவின் நேவி சீல்ஸ் ஆகும். அதிரடிக்கு பெயர் போன இவர்கள் போர்க்களத்தில் செய்யும் சாகசங்கள் ஈடினையற்றவை. ஆபத்தான ஆபரேஷன்களை மேற்கொள்ளும் இவர்களுக்கு, போரில் ஏற்படும் காயங்களை, அதிநவீன டெக்னாலஜியுடன் அவர்களே எதிர்கொள்கிறார்கள். காயம் ஏற்பட்ட பின், அவர்களே மருத்துவரின் உதவி இல்லாமல், உடனடியாக TXA எனும் ஊசியைப் போட்டு ரத்தம் கசிவதை நிறுத்துகிறார்கள். ஆக்சிடென்ட் மற்றும் போர்க்காயங்களில் அதிக இறப்புகள் ஏற்படுவது ரத்த இழப்பால் தான். வயிற்றில் ஏற்படும் காயங்களுக்கு ஆர்சினல் ஃபோம் என்ற சொல்லுஷனை ஏற்றுகிறார்கள். அது பஞ்சு தலையணை போல் உப்பி, வயிற்றில் ரத்தம் கசியும் இடத்தை அடைக்கிறது. ஹெக்ச்டன்ட் என்ற மருந்து உடலில் உள்ள நீரை அதிகரிக்கச் செய்யும். அதை இன்ஜெக்ட் செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
                ஒரு விஷயம் யோசியுங்கள். ஒரு மேஜர் சர்ஜரியின் போது வயிற்றைக் கிழித்து என்னனவோ செய்கிறார்கள். அப்போது உயிர் போவதில்லையே? ஏன் வயிற்றைக் கிழிப்பது போன்ற ஆக்சிடென்ட் ஆனால் மட்டும் உயிர் போகிறது? ஏனென்றால் ஆபரேஷன் ஒரு கண்ட்ரோல்ட் என்விரான்மெண்ட்டில் நடக்கிறது. விபத்து, நாம் கண்ட்ரோல் செய்யக்கூடிய விதத்தில் நடப்பதில்லை. எதையும் எதிர்ப்பார்த்து, டெக்னாலஜியின் துணையுடன், ஆக்சிடென்ட் டயத்தில் இந்த டெக்னாலஜிக்களை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்தால் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் தரப்படும் அல்லது புதுப்பிக்கப் பட முடியும் என சட்டம் கொண்டுவர வேண்டும். எல்லா கார்களிலும் இந்த அடிப்படை மருந்துகள் இருக்க வேண்டும். ஒருவருக்கு ஆக்சிடென்ட் நடந்தால், பின்னால் காரில் வருபவர் கண்டிப்பாக நிறுத்தி, மருத்துவமனைக்கு தகவல் சொல்லி, அவர் காரிலிருக்கும் இந்த மருத்துவ கிட் கொண்டு முடிந்தவரை விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயல வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். வேடிக்கை பார்த்துக்கொண்டு போவோரின் நம்பரை சிசி டிவி கேமராவில் பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் பதில் சொல்ல வைக்க வேண்டும். உதவி செய்தவருக்கு லட்சக்கணக்கில் பரிசு வழங்கி, இன்கம் டேக்ஸ் போன்றவற்றில் சலுகை தர வேண்டும். யோசித்துப் பாருங்கள். உங்கள் முன் ஒருவர் காரோட்டி ஆக்சிடன்ட் ஆகி விட்டால், நீங்கள் நிறுத்தி, எமெர்ஜென்சிக்கு போன் செய்து, உங்களுக்கு லைசென்ஸ் எடுக்கும் பொது சொல்லிக் கொடுத்த முதலுதவிகளை அவருக்கு செய்து, ஆம்புலன்ஸ் வரும் வரை நின்று அவரை அனுப்புவீர்கள். வீட்டிற்கு போனவுடன் ஒரு பாராட்டு பத்திரமும், டேக்ஸ் விதிவிலக்கும், ஐந்து லட்சம் பணமும் உங்களுக்கு வந்திருக்கும். உயிர் பிழைத்தவரின் குடும்பத்தின் நன்றிகளும் சேர்த்து.         
     ஆம்புலன்ஸ் எப்படி இருக்கும்? அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள முக்கால்வாசி வசதிகள், ஆம்புலன்சிலேயே இருக்கும். இரண்டு பாராமெடிக் டெக்னிஷியன்கள் இருப்பார்கள். பேஷன்ட்டை வண்டியில் ஏற்றிய பின்னர், ஒருவர் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவது, குளுக்கோஸ் ஏற்றுவது, போன்ற அவசர சிகிச்சைகளையளிக்க, இன்னொருவர், விபத்தில் சிக்கியவரின் பல்ஸ், பிரஷர், ரத்த இழப்பு அளவு, சுவாசம் போன்றவற்றை மருத்துவமனையில் எமெர்ஜென்சி பிரிவில் உள்ள டாக்டரிடம் போனில் கூறிக்கொண்டிருப்பார். அங்கு நடக்கும் எல்லாமும் லைவாக மருத்துவமனையில் டாக்டரின் ஸ்க்ரீனில் வீடியோவாக ஓடிக்கொண்டிருக்கும். டாக்டர் அதற்கேற்ப மருத்துவமனையில் இந்த பேஷன்ட்டுக்காக உபகரணங்களும், மருத்துவ ஊழியர்களும் ரெடியாக இருக்க வைப்பார். இது போன்ற கம்யூனிகேஷன்கள் தாம் ஒருவரின் வாழ்வையோ சாவையா தீர்மானிப்பதாகும். அதுமட்டுமில்லாமல், அந்த பேஷன்ட்டுக்கு ஆம்புலன்சில் செய்ய வேண்டிய அவசர சிகிச்சைகளை வீடியோவில் சொல்லிக்கொண்டே இருப்பார். அதற்கேற்றவாறு டெக்னிஷியனும் சிகிச்சை அளிப்பார். டிரைவர் இல்லாமல் ஒடும் ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்திற்கு சீக்கிரமாகவும், பேஷன்ட்டை மருத்துவமனைக்கு வேகமாகவும் எடுத்துச் செல்லும்.  
                பேஷன்ட் உள்ளே நுழைந்தவுடன், ஒரு கருவியில் அவரது கைரேகை வைக்கப்படும். அவரின் பெயர், அட்ரஸ், குடும்ப உறுப்பினர்களின் போன் நம்பர், அவரது மருத்துவ ரெக்கார்டுகள் அனைத்தும் கம்ப்யூட்டரில் தெரியும். உடனடியாக ரிஷப்ஷனிஸ்ட், அவரின் வீட்டிற்கு போன் செய்து விபத்து பற்றி தெரிவிப்பார்.
                எமர்ஜென்சி பிரிவில், மரண பயத்தைத் தரும் பெரிய வெயிட்டிங் ஹால், எக்கச்சக்கமான கூட்டம் போன்றவை இல்லாமல், சிறிய ஹால்கள் இருக்கும். உடனடியாக ஒரு நர்ஸ் வந்து பேஷன்ட்டைப் பார்த்து உயிர் போகும் அளவு அவசரம், அவசரம், அவசரமில்லை என்று பிரித்து தகுந்த பிரிவுக்கு அனுப்புவார். மருத்துவமனையின் டாக்டர்கள், நர்ஸ்களின் செல்போனில் முக்கிய ஆப் ஒன்று இருக்கும். அதன் வழியாக பேஷன்ட்டின் 'வைட்டல்ஸ்' எனப்படும் பல்ஸ், ரத்த ஆக்சிஜன் அளவு, சுவாச அளவு போன்றவை வந்து கொண்டே இருக்கும். ஒரு சிறிய கருவியை ஓட்ட வைப்பதன் மூலம், தேவையான அனைத்து டெஸ்டுகளையும் ரத்தத்தை உறிஞ்சி அதுவே செய்து ரிப்போர்ட்டை நர்சின் கம்ப்யூட்டருக்கு அனுப்பி விடும்.
                இதைப் போன்ற மருத்துவ வசதிகள் வந்தாலும், டிஸ்சார்ஜ் ஆன பின் பேஷன்ட்டுகள் பல மாதங்களுக்கு விபத்து ஏற்படுத்திய பயத்திலிருந்து விலகாமல் இருப்பர். காலம் முழுக்க ஒரு காரிலோ அல்லது பஸ்ஸிலோ ஏற தைரியம் இல்லாமல் அவதிப்படுவர். இதை குறைப்பதற்கு விபத்து நடந்ததையே மறக்க வைக்கும் மருந்துகளும் மருத்துவங்களும் வந்து விடும். நம் எல்லாரையும் போல் அவரும் இயல்பாக இருக்க இது வழி வகை செய்யும்.
      

     

No comments:

Post a Comment