Thursday, April 21, 2016

Episode-23-உடலே மனமே கலங்காதே : ஓம் ஷாந்தி

தலைப்பு: உடலே மனமே கலங்காதே : ஓம் ஷாந்தி
     கடவுளுக்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இயேசு, நபிகள், புத்தர் போன்றவர்கள் பல மக்களை குனமாக்கி பக்திக்கும் ஆரோக்கியத்திற்கும் பாலம் அமைத்தனர். சில வியாதிகளைப் போக்க பல புகழ்பெற்ற தர்காக்கள் உள்ளன. வேளாங்கண்ணி கோவிலுக்கு போனால், காணிக்கையாக உலோக மூக்கு, கண், கால்களை பலர் வழங்கியிருப்பதை பார்த்திருக்கலாம். வைத்தீஸ்வரன் கோவில் போய் குளத்தில் வெல்லத்தைக் கரைத்தால் தோல் நோய் சரியாகும், திருக்கருகாவூர், ராமேஸ்வரம் போனால் டெலிவரி நார்மலாக நடக்கும், விஷம் அருந்தினால், அதை முறிக்க, திருமருகல் செல்வது என அந்தக் காலத்திலேயே தமிழ்நாட்டு கோவில்கள் உடலை குணப்படுத்துவதற்காக பேர் போனவை. 
     இப்போதும் பல பேர் டாக்டரிடம் போகாமலே குணமாவதை பார்த்திருப்பீர்கள். "மாப்ள, வினை தீர்க்கும் விநாயகர் கோவிலுக்கு போ. போய் நல்லா சாமி கும்பிட்டு, வீபூதி வச்சுக்க. நாளைக்கே காய்ச்சல் சரியாயிடும்" என்ற அட்வைஸ்கள் மிகப் பிரபலம். பல முறை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்தவுடன் காய்ச்சல் சரியாகி விடும். அதற்குப் பின் அந்த பேஷன்டுக்கு அந்தக் கோவிலின் மேல் பக்தி முற்றி காவடி, அங்கப் பிரதக்ஷணம் என்று முன்னேறி, "மாப்ள. என்ன ஜூரமா? அந்த டாக்டர்ட்ட போவாத. வினை தீர்க்கும் விநாயகர் கோவிலுக்கு போ. நான் சொன்னேன்னு குருக்கள்ட்ட ஸ்பெஷல் வீபூதி வாங்கு. நாளைக்கே உனக்கு உடம்பு சரியாயிடும்" என்று அடுத்தவருக்கு கூறுவதில் வந்து நிற்கும்.
     சாமி கும்பிட்டால் சில வியாதிகள் சரியாகிறது. அது எப்படி என்பதை பற்றி மட்டும் இந்த எபிசோடில் பார்ப்போம். என் கிளினிக்கிற்கு வரும் பல பேஷன்ட்டுகளின் பிரஷர் அதிகமாக இருக்கும். நான் கேட்பேன் "ஏம்மா, போன தடவ என்ன பாக்கும் போது பிரஷர் கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்குனு சொன்னனா" வென்று. "ஆமா டாக்டர், கொஞ்சம் பார்டருக்கு மேல இருக்குனு சொன்னீங்க" என்று பதில் வந்தால், உடனே பிரஷர் மருந்து ஆரம்பித்து விடுவோம். ஆனால், "இல்ல டாக்டர், நான் செக் பண்ணிருக்கேன், நார்மல் தான்" என்றால், அதற்கு காரணம் டாக்டரைப் பார்த்தால் என்ன சொல்லுவாரோ என்ற பயத்தில் ஏறிய பிஷர் தான். "வெளிய கொஞ்சம் காத்தாட நல்லா மூச்சு விட்டுக்கிட்டே போயிட்டு அரை மணி நேரம் கழிச்சு வாங்கனு சொல்லுவேன்". அரை மணி கழிச்சு பாத்தா பிபி நார்மலா இருக்கும். நம் மனதின் பவர் அது. ஒருவரை அது ரத்தக் கொதிப்பு பேஷன்டும் ஆக்கலாம், நினைத்தால் நார்மலாகவும் ஆக்கலாம்.
     தியானம் பிரஷர் மற்றும் இதயத் துடிப்பு அளவு போன்றவற்றை குறைக்கிறது. மெலட்டோனின், செரட்டோனின் போன்ற ஹார்மோன் அளவுகளை கட்டுப்படுத்தி, நம் தூக்கத்தை சீராக்கி, கோபங்களை கட்டுப்படுத்கிறது. கடவுள் நம்பிக்கை, எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பிரஷரை குறைத்து,  இதயத்தையும் ஆரோக்கியமாக்குகிறது. அந்தக்காலத்தில் நம் நாட்டு அரசர்கள் ஆயிரக்கணக்கில் கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். அவை மக்களின் நிம்மதிக்காக மட்டுமில்லை, ஆரோக்கியத்திற்காகவும் தான். கோவில், சர்ச், மசூதிக்கு அடிக்கடி செல்பவர்கள், கோவிலுக்கே போகாதவர்களை விட ஏழு வருடங்கள் அதிகம் வாழ்வார்களாம். கோவிலுக்கு அதிகம் செல்லாமல் இருந்தாலும், கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்கள், நாத்திகர்களை விட அதிகம் வாழ்கிறார்கள் என மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. தி.க கட்சிக்காரர்கள் யோசிக்கவும்.
     கேன்சர் பேஷண்டுகளிள் வலியும் சோர்வும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கம்மியாகவும், நாத்திகர்களுக்கு வலியும், சோர்வும் அதிகமாக இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கேன்சர் வந்தவர்கள் கடவுளை கும்பிட்டால், சீக்கிரம் குணமாவதாகவும், கடவுள் நம்பிக்கை இல்லா விட்டால், மெதுவாக குனமடைவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. மருத்துவர்கள், மருத்துவத்தைத் தாண்டியும், கடவுள் நம்பிக்கை பற்றி பேஷண்டுகளிடம் இதற்காகவே பேச வேண்டும். ஆர்த்ரைட்டிஸ் எனும் ஜாயிண்டுகளின் நோய் இருப்பவர்களுக்கு மருந்துகள் கொடுத்தால், ஆத்திகர்களுக்கு, நாத்திகர்களை விட சீக்கிரம் வலி குறைவதாக சொல்கிறார்கள். அதே போல் எதற்காவது ஆபரேஷன் செய்தால், ஆத்திகர்கள், சீக்கிரம் முன்னேற்றம் அடைகிறார்கள்.
     விபாசன புத்தமதத்தில் செய்யப்படும், "Mindfullness meditation" எனும் ஒரு வகை தியானத்தை செய்தால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு சுகர் குறைகிறது. மற்ற தியானங்கள், யோகா, சாமி கும்பிடுதல் ஆகிய பிரிவுகளில் இன்னும் ஆராய்ச்சிகள் அதிகம் செய்யப்படவில்லை. இறக்கும் போது டாக்டர்கள், தங்களிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றி பேச வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். டாக்டர்கள் மருத்துவ அறிவைத் தாண்டி, நாம் இறந்த பின் என்னாவோம், ஆத்மா என்றால் என்ன, பூமியில் நம் கடமை என்ன போன்ற இறக்கும் தருவாயில் இருக்கும் பேஷண்டுகளிடம் பேச வேண்டியதும் முக்கியமே.
     "டாக்டர், எவ்ளோ வருஷமா எனக்கு இந்தப் பிரச்னை இருக்கு. யார் யாரையோ பாத்தும் கம்ப்ளீட்டா சரியாக மாட்டேங்குது, வாழ்க்கையே வெறுக்குது டாக்டர்" என்று கூறுகையில், அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்குமானால், "இந்த சாமிய வேண்டிக்கிட்டு விபூதி வச்சுக்க. போன மாசம் உன்ன மாதிரியே கஷ்டப்படுற பேஷண்டுக்கிட்ட இதை சொன்னேன். இப்ப கொஞ்சம் நல்லாயிருக்கு" என டாக்டர்கள் சொல்லலாம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான் முக்கியம். அந்த நம்பிக்கை அவர்கள் வியாதியை முழுமையாக குணப்படுத்தாவிட்டாலும் சரி, அட்லீஸ்ட் பேஷன்ட் கொஞ்சம் மனம் உடையாமலாவது இருப்பார்.
     ஒரு ஆராய்ச்சியில், டாக்டரை பார்க்க செல்லும் பெஷன்ட்டுகளில், 60 முதல் 90 சதவிதத்தனர் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனச்சுமையால் வரும் உடல் வலி, தலை வலி, பிரஷர், சுகர், தூக்கமின்மை, அல்சர் போன்ற வியாதிகளுக்கே வருகிறார்கள். அதனால் ஸ்ட்ரெசை குறைக்கும் வழிகளான, தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, ரெகுலராக சாமி கும்பிடுதல் போன்றவை இந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்.   
     நம் உடம்பு முழுக்க முழுக்க சதை, ரத்தம், கெமிக்கல்களானானது அல்ல. நாம் முழுவதுமாக அதைப் பற்றி அறியவில்லை. காலில் முள் குத்தினால் அழும் பலர், அசால்டாக தீ மிதிப்பது எப்படி? ஏன் அவர்கள் வலியை உணர்வதில்லை? சாமி வந்து ஆடுவது, "ஸ்பிளிட் பெர்சனாலிட்டி" எனும் மன நோய் என சைக்கியாடிரிஸ்டுகள் வாதிடுகிறார்கள். ஒரு ஆராய்ச்சி கூட இது சம்பந்தமாக நடந்ததில்லை. நம் மனதுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அறியாமல், தனக்கு தெரியாதெல்லாம் பொய் என பலர் டாக்டர்கள் நினைக்கிறார்கள்.

     'அட சாமி கும்பிடரதுல, இவ்ளோ நல்லது இருக்கா. அப்ப டாக்டர் பீஸ் மிச்சம் டோய்' என கோவில் கோவிலா சுத்திக்கிட்டுருக்கக் கூடாது. டாக்டரைப் பார்த்து சிகிச்சைகள் செய்து கொண்டே கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, மனமுருகிப் பிராத்தித்தால், சீக்கிரம் குணமாகி, ஏழு வருடங்கள் எக்ஸ்ட்ரா வாழலாம்.              

No comments:

Post a Comment